கணக்குப் பிரிவு
தொடர்பு கொள்வதற்கு உரிய தகவல்கள்
பெயர் | பதவி | தொலைபேசி இலக்கம் | பக்ஸ் இலக்கம் |
திருமதி ஆர்.எம்.இ.சி.பி. மெனிகே | கணக்காளர் | 011-2092742 | – |
பொறுப்புக்களும் கடமைகளும்
- உத்தியோகபூர்வ வங்கிக் கணக்குக்கு உரிய நடவடிக்கை.
- எல்லா வகையான பெறுகைகளும் ( நிதி மற்றும் காசோலை) வங்கியில் வைப்பிலிடல், அது தொடர்பான ஏடுகளைப் பேணிச் செல்லுதல் மற்றும் பற்றுச் சீட்டுக்களை வழங்குதல்.
- சிறு கட்டு நிதியைப் பேணிச் செல்லுதல் மற்றும் அதில் கொடுப்பனவு நடவடிக்கையினை மெற்கொள்ளல்
- அமைச்சின் பெறுகைக் குழுவினைப் பேணிச் செல்லுதல்
- கணக்குப் பிரிவிற்கு உரிய அரச நிர்வாக, திறைசேரி, மாகாண சபை தொடர்பான சுற்றறிக்கை கோப்புக்களைப் பேணிச் செல்லுதல்.
- வருடாந்த வரவுசெலவுத் திட்டத்தினைத் தயாரித்தல்.
- வருடாந்த பொருட் கணக்கெடுப்பு நடவடிக்கையினை ஒழுங்கு செய்தல்.
- அமைச்சு மற்றும் அமைச்சின் கீழ் காணப்படும் தாபனங்களின் கணக்காய்வு மற்றும் முகாமைத்துவக் கூட்டங்களின் இணைப்பு நடவடிக்கை.
- அரச கணக்குச் செயற்குழு தொடர்பான நடவடிக்கைளை தயாரித்தல்,
- அமைச்சின் களஞ்சியத்தினைப் பேணிச் செல்லுதல் மற்றும் ஒழுங்குபடுத்துதல்.
- அமைச்சின் எல்லாக் கொடுப்பனவு நடவடிக்கைகளை மேற்கொள்ளல் (முற்பண நிதி, ஆளுக்குரி வேதனாதிகள்,மேலதிக நேரக் கொடுப்பனவு பயணப்படி ,மற்றும் பிற எல்லாக் கொடுப்பனவுகள்) மற்றும் உரிய புத்தகங்கள் உரிய முறையில் ஒழுங்காகப் பேணிச் செல்லுதல்.
- பொருட் பதிவேட்டினை ஒழுங்கான முறையில் பேணிச் செல்லுத்தல்
- பொருட்களை ஏலம் இடும் நடவடிக்கையினை ஒழுங்கு படுத்துதல்
- அமைச்சு மற்றும் அமைச்சிற்கு இணைந்த எல்லா அலுவலகர்களினதும் சம்பளங்களைத் தயாரித்ததல், நாட் சம்பளங்களைத் தயாரித்ததல் மற்றும் அதற்கு இணைந்த நடவடிக்கை.
- தபால் ஏட்டினைப் பேணிச் செல்லுதல்,பிரதம செயலாளர் காரியாலய புத்தகங்களுடன் மாதாந்தம் இணக்கம் செய்தல்.
- அமைச்சிற்கு உரிய எல்லா ஒதுக்கீட்டு ஏடுகளையும் பேணிச் செல்லுதல் ஒவ்வொரு மாதமும் இறுதித் தினத்தில் ஒதுக்கிட்டு ஏட்டினை சமநிலைப்படுத்தி கணக்குப் பொழிப்புடன் இணக்கம் செய்தல்.
- அமைச்சு மற்றும் அமைச்சின் கீழ் காணப்படும் திணைக்களங்களுக்கு உரிய வகைமாற்ற ஒழுங்கு நடவடிக்கையினை மேற்கொள்ளல்.
- அமைச்சின் திட்டங்களுக்கு உரிய ஏற்பாட்டினைப் பெற்றுக் கொள்ளுதல், வழங்குதல் மற்றும் உரிய ஏடுகளில் பேணிச் செல்லுதல்.
- எல்லா கணக்கு அறிக்கைளையும் மாதாந்தம் பிரதம செயலாளர் காரியாலயத்தின் அறிக்கைகளுடன் இணக்கம் செய்தல்..
- வருடாந்த ஒதுக்கீட்டுக் கணக்கினைத் தயாரித்ததல்.
- அமைச்சின் கொடுப்பனவு செய்யப்படும் எல்லா உறுதிச்சீட்டுக்கள் மற்றும் எல்லாப் பெறுகைகளையும் நாளாந்தம் கிகாஸ் நிகழ்ச்சித்திட்டத்தில் உள்ளடக்கி காசேடு, ஒதுக்கீட்டுப் புத்தகம் முற்பணக் ஏடுகளுடன் இணக்கம் செய்து அடுத்த மாதம் 10 ஆந் திகதிக்கு முன் பிரதம செயலாளர் காரியாலயத்திற்கு உரிய அறிக்கைகளுடன் அனுப்புதல்.
- அரச அலுவலகர்களின் முற்பண கணக்கினை மார்ச்சு மாதம் 15 ஆந் திகதிக்கு முன் தயாரித்தல்,அதற்கு உரிய எல்லா கடமைகளையும் மேற்கொள்ளல் மற்றும் உரிய ஏடுகளைப் பேணிச் செல்லுதல்.
- வருடாந்த கட்டு நிதி ஒழுக்கு மற்றும் மாதாந்த நிதி வேண்டுகோள் அறிக்கையினை உரிய தினத்திற்கு முன்வைத்தல்.
- அமைச்சின் காசேட்டிற்கு உரிய எல்லா கடமை நடவடிக்கையும்.
- அமைச்சின் கணக்கிற்கு உரிய வங்கிக் கணக்கிணக்கக் கூற்றினைத் தயாரித்து ஒவ்வொரு மாதமும் 15 ஆந் திகதிக்கு முன் கணக்காய்வுப் பிரிவிற்கு அனுப்புதல்.
- வருமானம் தொடர்பான நடவடிக்கை- வீதி அபிவிருத்தி அதிகார சபை, பயணிகள் போக்குவரத்து அதிகார சபை,கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபைகளின் சம்பளம் படி,வருமான உதவிகளை மற்றும் உறுதிச் சீட்டுக்களை தயாரித்து முன்வைத்தல்.
- அமைச்சுக்குரிய எல்லா கணக்காய்வு அறிக்கைகளுக்குமான பதில்களை உரி பிரிவுகளில் இருந்து பெற்று தயாரித்து அனுப்புதல்.
- பொது வைப்புக் கணக்கினைப் பேணிச் செல்லுதல்.