தாபனப் பிரிவு
தொடர்பு கொள்வதற்கு உரிய தகவல்கள்
பெயர் | பதவி | தொலைபேசி இலக்கம் | பக்ஸ் இலக்கம் |
திருமதி ஆர்.எம். தினேஷா குமாரி | உதவிச் செயலாளர் (பதில் கடமை) | 011-2092755 | – |
செல்வி எம். டி. லக்மாலி ஜயசேகர | உதவிச் செயலாளர் | 011-2092754 | – |
திருமதி ஆர்.ஏ. இரேஷா ஷியாமலி | நிர்வாக அலுவலர் | 011-2092749 | – |
பொறுப்புக்களும் கடமைகளும்
- தபால் தொடர்பான நடவடிக்கை எடுத்தல்
- அலுவலகர்களுக்கு கடமைகளை ஒப்படைப்பதற்காக நடவடிக்கை எடுத்த்தல். மனித வள ஒழுங்கமைப்புத் திட்டத்தினை நடைமுறைப்படுத்துதல்.
- அமைச்சின் செயலாளர் நியமன அதிகாரியான பதவிகளுக்கு உரிய ஆட்சேர்ப்பு, வினைதிறன் தடை தாண்டும் பரீட்சையினை நடாத்துதல், பதவிகளை நிரந்தர மாக்குதல், பதவி உயர்வு வழங்குதல், இணைப்பு நடவடிக்கையினை மேற்கொள்ளல் ஓய்வு பெறச் செய்தல்.
- அமைச்சின் காரியாலய கட்டடத்தின் பாராமரிப்பு நடவடிக்கை , இயந்திரங்களின் பராமரிப்பு மற்றும் சேவை உடன்படிக்கை தொடர்பாக நடவடிக்கை எடுத்தல்.
- பணியாட்களின் விடுமுறை நாட் சம்பளம்,மேலதிக நேரப் படி மற்றும் பணயப்படிகள் தொடர்பாக அங்கீகாரத்தினைப் பெறுக்கொள்ளுதல்.
- புகையிரத ஆணைச்சீட்டு மற்றும் இலவச புகையிரத பயணச் சீட்டு தொடர்பான நடவடிக்கை.
- அலுவலகர்களின் அக்கிர கார காப்புறுதி மற்றும் ஊழிய இளப்பீடு தொடர்பான நடவடிக்கை.
- வாகன மேற்பார்வை , பராமரிப்பு, பழுது பார்ப்பு தொடர்பான கடமை நடவடிக்கை.
- அமைச்சின் பணியாட்களின் மற்றும் திணைக்களத் தலைவர்களின் பெயர் வளிக் கோப்புக்களைப் பேணிச் செல்லுதல், மற்றும் ஒழுங்கு படுத்துதல். அத்துடன் ஒழுக்காறு தொடர்பான நடவடிக்கை.
- விடயப் பொறுப்பு அமைச்சர் மற்றும் அமைச்சரின் தனிப்பட்ட பணியாட்களின், அமைச்சின் மற்றும் அதன் கீழ் காணப்படும் எல்லா தாபனங்களினதும் பணியாட்களின் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விடுமுறைகள் தொடர்பாக நடவடிக்கை எடுத்தல்.
- அமைச்சு மற்றும் அதன் கீழ் காணப்படும் பணியாட்களை உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுப் பயிற்சிக்காக அனுப்புதல்.
- அலுவலகர்களின் கடன் அனுமதி (இடர் கடன் / வீடமைப்புக் கடன் / விழா முற்பணம் / விசேட முற்பணம்)பெற்றுக்கொள்ளுதல்.
- காரியாலயத்தின் நீர், மின்சாரம், பாதுகாப்புச்சேவை, சுத்தப்படுதல் சேவை, மற்றும் தொலைபேசிகள் தொடர்பாக நடவடிக்க எடுத்தல்.
- விடயப் பொறுப்பு அமைச்சரின் தனிப்பட்ட பணியாட்களை நியமித்தல் மற்றம் அமைச்சரின் காரியாலயத்தின் வேண்டு கோள்கள் தொடர்பான நடவடிக்கைகளை எடுத்தல்.
- கனிஷ்ட பணியாட்களுக்கு உத்தியோக பூர்வ ஆடையினை வழங்வதற்கு உரிய அங்கீகாரத்தினைப் பெறுக் கொள்ளுதல்.
- தேர்தல் காலங்களில் தபால் வாக்கு நடவடிக்கைகள் மற்றும் தேர்தல் கடமைகளுக்காக அலுவலகர்களை இணைத்தல்.
- ஆசோசனைச் செயற்குழுக்களை நடாத்துதல், சபை வினாக்களுக்கு பதில் வழங்குதல்.
- உற்பத்தித்திறன் கோட்பாட்டினை நடைமுறைப்படுத்துதல்.
- அமைச்சின் விடயப் பரப்பின் கீழ் காணப்படும் போக்குவரத்து விடயங்களுக்கு உரிய மோட்டார் போக்குவத்து ஆணையாளர் திணைக்களத்தின் மற்றும் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் தாபன அபிவிருத்தி நடவடிக்கையினை ஒழுங்கமைப்புச் செய்தல்.
- பணியாட்களின் அறிக்கைகளை சந்தர்ப்பத்திற்கு ஏற்ற முறையில் தகவல்களைப் பெற்றுக்கொடுத்தல்.
- அமைச்சின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கையினைத் தயாரித்தல்.
- வருடாந்த மதிப்பீட்டினைத் தயாரிக்கும் விடயத்திற்காக தகவல்களை வழங்குதல்.
- அமைச்சின் வெப் தளத்தினை ஒழுங்கு படுத்துதல்.
- சந்தர்ப்பத்திற்கு ஏற்ற முறையில் ஒப்படைக்கப்படும் பல்வேறுபட்ட நிகழ்ச்சித்திட்டங்களின் இணைப்பு நடவடிக்கையினை மேற்கொள்ளல் ( “ ஜனாதிபதிக்குச் சொல்லுங்கள்” நிகழ்ச்சித் திட்டம் ,ஈ – அரச கொள்கை, சிறுநீரக நிவாரண நிகழ்ச்சித் திட்டம் , தகவல் சட்டத்தினை நடைமுறைப் படுத்துதல்…)
- அ.நி.சு. மற்றும் திறைசேரியின் சுற்றறிக்கைகளை ஒழுங்காகப் பேணிச் செல்லுதல் மற்றும் அமைச்சுக்கு இணைக்கப்பட்டு உள்ள தாபனங்களுக்கு பகிர்ந்தளித்தல்.